பகவத் கீதை வெண்பா

அந்தத் தியாகத் தறுதியினை யென்பாற்கேள்
சந்ததிகள் பாரதர்க டந்தலைவா- முந்துறவே
யான்பகர்ந்தேன் மூன்றுவகை யென்றே தியாகத்தைத்
தான்பயனச் சங்கந் தவிர்ந்து .         18.4

பாரதர்கள் சந்ததிகள் தம் தலைவா

பரத குலத்தில் உதித்தவர்களுக்குத் தலைவனே!

அந்தத்தியாகத்து

(இப்படிக் கருத்துவேற்றுமைக்குட்பட்ட) அந்தத் தியாக விஷயத்தில்

அறுதியினை

நிர்ணயத்தை

என்பால் கேள்

என்னிடம் கேட்பாயாக

தியாகத்தை

முற்கூறிய தியாகத்தை

தான் பயன் அச்சங்கம் தவிர்ந்து

கர்மம் பயன் செயல்பாடு ஆகிய மூன்றிலும் தன்னுடையது என்னும் பற்றை விடுகையாலே

மூன்றுவகை என்றே

மூன்று வகைப்பட்டது என்றே

யான் முந்துறவே பகர்ந்தேன்

நான் முன்னமே கூறினேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top