பகவத் கீதை வெண்பா சமந்தமஞ் சார்ந்த தவந்தன் னமர்ந்தசுத்தி நமர்ந்த பொறைசெவ்வை ஞான- மமர்ந்த விறையறி வுண்மையுணர் விக்கரும மாகு மறையவர்தந் தன்மை மதம். 18.42 சமம் வெளி இந்திரியங்களை அடக்குதல் தமம் உள் இந்திரியமான மனத்தை அடக்குதல் சார்ந்த தவம் சாஸ்திரங்களையொட்டி சரீரத்தை வருத்துதல் தன் அமர்ந்த சுத்தி சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல் நமர்ந்த பொறை பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடடையாமல் இருத்தல் செவ்வை பிறரிடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப்பட நடத்தல் ஞானம் பரதத்துவத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் அமர்ந்த இறையறிவு பரதத்துவத்திடம் இருக்கும் தனித்தன்மைகளை அறிதல் உண்மை உணர்வு வேதத்தில் சொல்லியது அனைத்துமே உண்மையானது என்று உறுதி கொள்ளல் இக்கருமம் ஆகிய இச்செயல்கள் ஆகிய இச்செயல்கள் அந்தணர்களுக்கு முன் வினையால் ஏற்பட்டவையாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவையாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0