பகவத் கீதை வெண்பா தந்தங் கருமத்துச் சார்ந்தே தருமபயன்வந்தடைய லாகு மனிசர்க்குச்- சந்தமுடன்றன்கரும நின்றொருவன் தன்சித்திச் சார்வகையை நன்கமரக் கேணீ நயந்து. 18.45 தம்தம்கருமத்துச் சார்ந்தே அவரவர் வர்ணத்திற்குரிய கர்மத்தை அனுஷ்டிப்பதாலேயே மனிசர்க்கு மனிதப் பிறவியை அடைந்தவர்களுக்கு தருமபயன் வந்தடையலாகும் மோக்ஷ ஸாதநத்தின் பயனான மோக்ஷம் கிட்டும் சந்தமுடன் மனப்பூர்வமாக ஓருவன் ஒரு மனிதன் தன் கருமம் நின்று தன் வர்ணத்திற்குரிய கர்மத்தில் நிலைநிற்பதால் தன் சித்தி சார் வகையை தனக்குரிய மோக்ஷஸித்த,யை அடையும்முறையை நீ நீ நன்கு அமர நயந்து கேள் நன்கு கவனமாக விருப்புடன் கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0