பகவத் கீதை வெண்பா காணி விளைப்பதுவும் காலியவை காப்பதுவும் வாணியமும் வைசியர்க்கு வாய்த்ததொழில் – பேணியவர் மூவர்க்கு மாளாய் முயலுமதே சூத்திரர்க்கு மேவப் படுந்தொழிலா மிக்கு. 18.44 காணி விளைப்பதுவும் வயலில் உழவுத்தொழில் செய்து பயிர் விளைப்பதும் காலி அவை காப்பதுவும் பசு காளை எருமை முதலானவற்றை ரக்ஷிப்பதுவும் வாணியமும் வியாபாரமும் வைசியர்க்கு வைசியர்களுக்கு வாய்த்த தொழில் முன் வினையால் விளைந்த செயல்களாகும் பேணி மெய்வருந்தி அவர் மூவர்க்கும் ஆளாய் முயலுவதே முற்கூறிய மூன்று வர்ணத்தவர்களுக்கும் பணிபுரிபவனாய் இருக்கையே சூத்திரர்க்கு நாலாவது வர்ணத்தைச் சேர்ந்த சூத்திரர்களுக்கு மிக்கு மேவப்படும் தொழிலாம் மிகவும் கைக்கொள்ளத்தக்க செயலாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0