பகவத் கீதை வெண்பா

எங்குந் துவக்கின்றி யேலு மனஞ்செயித்துப்
பொங்கு நசையில்லாப் போதத்தா – னங்குத்
தனையமர் சன்னியாசச் சார்வதனான்மேவும்
வினையகன்ற மேலாம் வியப்பு.         18.49

எங்கும்

கர்மத்திலும் அதன் பலத்திலும்

துவக்கின்றி

பற்றற்றவனாய்

ஏலும் மனம் செயித்து

(அதனால்) வசப்பட்ட மனத்தை வென்றவனாய்

பொங்கு நசையில்லா போதத்தான்

(தன்னுடைய கர்த்ருத்வத்தில்) மிக்க ஆசையில்லாத அறிவுடையவன்

அங்குத் தனையமர் சன்னியாசச் சார்வதனால்

கீழே கூறப்பட்ட (மூவகைப்பட்ட) தியாகத்தோடு கூடியிருப்பதனால்

வினையகன்ற மேலாம் வியப்பு மேவும்

கர்மங்களை அநுஷ்டித்தபின் பெறும் மேலான தியான நிஷ்டையைப் பெறுவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top