பகவத் கீதை வெண்பா

மாய னருள்கீதை மன்னு பொருடன்னைத்
தூய பெரும்பூதூர்த் தொன்முனிதன் – மேய
தகையான் மணவாள மாமுனிவன் சொன்னான்
றொகையாரும் வெண்பாச் சுரந்து.        18.78F

மாயன் அருள் கீதை மன்னு பொருள் தன்னை

கண்ணன் அருளிய கீதையின் உண்மையான பொருளை

தூய பெரும்பூதூர் தொன்முனிதன் மேய தகையால்

ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த தூய்மைமிக்க யதிராஜரின் பரம கருணையாலே

தொகை ஆறும் வெண்பாச் சுரந்து

தொகுத்துக் கூறும் வெண்பாக்களாகப் பாடி

மணவாள மாமுனிவன் சொன்னான்

அழகிய மணவாளச் சீயர் சொன்னார்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top