பகவத் கீதை வெண்பா

வேறுபடு பூதங்கண் மேவுயிரும் வெவ்வேறாய்க்
கூறு படும்வகையிற் கூடுமெனத் தேறு
மறிவை விடைக்குணததி லாகியின் வண்ணஞ்
செறிவதென வேயறிநீ தேர்ந்து.         18.21

வேறு படு பூதங்கள் மேவு உயிரும்

(முற்கூறிய) ப்ராஹ்மணர் முதலான வேறுபட்ட சரீரங்களை உடைய எல்லா உயிர்களையும்

வெவ்வேறாய்க் கூறுபடும் வகையில் கூடும் என

(ப்ராஹ்மணர் முதலான ஜாதிகளின் தனித்தன்மையையிட்டும் வெளுப்பு சிவப்பு உயரம்குட்டை முதலான குணங்களையிட்டும்) வேறுவேறாயிருப்பவை என்று

தேறும் அறிவை

நிர்ணயிக்கும் அறிவை

இடை குணத்தில் ஆகி

ரஜோகுணத்தினால் உண்டாகி

இவ்வண்ணம்

இந்த முறையில்

செறிவது எனவே

நிர்ணயிக்கிறது என்று

நீ தேர்ந்து அறி

நீ ஆராய்ந்து அறிவாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top