பகவத் கீதை வெண்பா

ஏதேனு மோர்கருமத் தெல்லாம் பெறலாமென்
றாதே நசைபண்ணி பற்பமாய் – மீதேயோர்
மெய்ம்மை யடையா வெறுமறிவு பிற்குணத்திற்
பொய்ம்மை புனையும புணர்ந்து.         18.22

ஏதேனும் ஓர் கருமத்து

(இறந்தவர்களையும் பூதங்களையும் ஆராதிப்பதாகிற) மிகக்குறைந்த பலனையுடைய ஒருசெயலில்

எல்லாம் பெறலாம் என்று

நிறைந்த எல்லாப் பலனையும் பெறலாம் என்று எண்ணி

ஆதே நசை பண்ணி

அச்செயலிலேயே ஈடுபட்டு

அற்பமாய்

மிகத்தாழ்ந்ததாய்

மீதே ஓர் மெய்ம்மையடையா

(முன்பாட்டில் சொன்னது போலே ஆத்மாக்களை வேறுபாடுகள் உடையதாகக் காண்கையாகிற) பெரியதோர் பொய்யைப் பற்றி நிற்பதாய்

வெறும் அறிவு

(முற்கூறியபடி தாழ்ந்த செயலில் ஈடுபடக்) காரணமும் அற்றதான அறிவு

பின் குணத்தில் புணர்ந்து

கடைக்குணமான தமோ குணத்தினால் உண்டாகி

பொய்ம்மை புனையும்

விபரீதமான பலனைக் கொடுக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top