பகவத் கீதை வெண்பா இப்பிறவிச் சங்க மிவரால் வெலப்பட்ட தொப்பி வெவர்க்குமன மொத்தமைந்த-தப்படியாத் தீதிலா வொத்தவுயிர் சீரார் பிரமததுள் மீதுதான் நிற்பரவர் மிக்கு. 5.18 எவர்க்கு எவர்க்கு மனம் மனமானது ஒப்பில் (முன் பாட்டிற் சொன்ன) ஆத்மஸாம்யத்தில் ஒத்து அமைந்தது பொருந்தி நிற்கிறதோ இவரால் இத்தகையவர்களால் இப்பிறவி சங்கம் இப்பிறவியோடு தொடர்பாகிற ஸம்ஸாரம் வெலப்பட்டது ஜயிக்கப்பட்டது அப்படியா முன் பாட்டில் சொன்ன ரீதியில் தீதிலா (ப்ரக்ருதி ஸம்பந்தரூப) தோஷமற்றதாய் ஒத்த உயிர் (அதனாலேயே ) ஸமமாயிருப்பதான ஆதம்ஸ்வரூபமாகிற சீர்ஆர் பிரமத்துள் சீர்மைமிக்க ப்ரஹ்மத்தினுள் அவர் அவர்கள் மீது தான் நிலையாகத்தானே மிககு நிற்பர் ஈடுபட்டு நிற்பர். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0