பகவத் கீதை வெண்பா

இன்பமது பெற்றுகவா னின்னாத துண்ணடுங்கான் 
றன்படியிற் புந்தி தனை நிறுத்தி-முன்பயிலு
மோக மொழிந்திறையை முற்றுமறிந் திவ்வுயிரின்
போகமதி னின்றமைந்தான் பூண்டு    5.19

தன் படியில்

தன் ஸ்வரூபத்தில்

புந்தி தனை நிறுத்தி

தன் அறிவை நிலைநிறுத்தி

முன் பயிலும்

அநாதிகாலமாகத் தொடர்ந்துவரும்

மோகம் ஒழிந்து

தேஹாத்ம மயக்கம் நீங்கப்பெற்று

இறையை முற்றும் அறிந்து

ப்ரஹ்மமெனப்படும் ஆத்மாவை முழுவதும் உணர்ந்து

இவ்வுயிரின் போகமதில் நின்று பூண்டு அமைந்தான்

இவ்வாத்ம ஸ்வரூபத்தின் அனுபவத்தில் நிலைநின்று அதையே பெரும் பேறாகக்கொண்டு பொருந்தியிருப்பவன்

இன்பம் அது பெற்று

ப்ராக்ருதமான இனியபொருளைப்பெற்று இன்புறமாட்டான்

இன்னாதது (அது பெற்று)

இனியதல்லாத ப்ராக்ருதப்பொருளைப் பெற்று

உள் நடுங்கான்

நெஞ்சில் நடுக்கம் கொள்ளமாட்டான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top