பகவத் கீதை வெண்பா புறம்பயிலுந் தொத்தற்ற புநதியனா யுள்ளே சிறந்தவுயி ரின்பமெவன் சேருந்-துறந்தவவன் சேரும் பிரமத்திற் சிநதையன யந்தமிலா தாருஞ் சுகமடையு மாங்கு. 5.20 புறம் பயிலும் தொத்து அற்ற புந்தியனாய் வெளி விஷயங்களிலேயே ஈடுபடும் தாழ்வு இல்லாத நெஞ்சை உடையவனாய் உள்ளே உள்ளேயிருக்கும் சிறந்த உயிர் இன்பம் சிறந்ததான ஆத்மாவில் இன்பத்தை எவன் சேரும் எந்தக் கர்மயோகி அடைகிறானோ துறந்த அவன் பிராகிருதப் பொருள்களைப் பயில்வதை விட்ட அவன் பிரமத்தில் சேரும் சிந்தையனாய் ஆத்மாவைப் பயில்வதிலேயே ஈடுபட்ட மனத்தை உடையவனாய் ஆங்கு பல தடையில் அந்தம இலாது ஆரும சுகம் அடையும் அழிவில்லாமல் வரும் ஆத்மாநுபவ ஸுகத்தை அடைவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0