பகவத் கீதை வெண்பா புலன்சேர் பொறியில்வரும போகங்க டுன்பக் குலஞ்சேருங் காரணமாங் கேளாய் – நலஞ்சேர்ந்து நிற்பதுவுமில்லை நிறைஞான வானவற்றி லற்பமுகப் பெய்தா னமர்ந்து. 5.21 புலன் சேர் பொறியில் வரும் போகங்கள் விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் துன்பக் குலம் சேரும காரணமாம் துக்க ஸமூஹங்கள் வந்தடைவதற்குக் காரணமாயிருக்கின்றன கேளாய் (மேலும் அவற்றின் இயல்வைக்) கேட்பாயாக நலம் சேர்ந்து நிற்பதுவும இல்லை எவ்விதமான சிறப்பையும் உடையவையாய் நிலையாயிருப்பதும் இல்லை நிறை ஞான வான் அறிவு நிறைந்தவன் அவற்றில் அந்த ப்ராக்ருத இன்பங்களில் அற்பமும் ஒரு சிறிதும் அமர்ந்து ஈடுபட்டு உகப்பு எய்தான் ஆனந்தததை அடைய மாட்டான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0