பகவத் கீதை வெண்பா

சாங்கியமும் யோகமதுந் தானறியார் வேறென்பா 
ராங்கதனை நன்கறிவா ரஃதுரையா-ராங்கவற்றி
லொன்றுதனி னின்று முடனியல்வா னவ்விரண்டி
னின்றபய னெல்லா நிகழ்ந்து.     5.4

சாங்கியமும் யோகம் அதும் தான்

ஜ்ஞாநயோகத்தையும்,கர்மயோகத்தையும்

அறியார்

அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள்

வேறு என்பார்

(பலத்தில்) வேறுபட்டவை என்று உரைப்பார்கள்

ஆங்கு அதனை

அப்பல விஷயத்தில் ஒன்றுபட்டவையே என்பதை

நன்கு அறிவார்

நன்கு அறிகின்ற பண்டிதர்கள்

அஃது

அவை (பலத்தில்) வேறு பட்டவையென

உரையார்

கூறமாட்டார்கள்

ஆங்கு அவற்றில்

அவ்விரண்டு யோகங்களினுள்ளும்

ஒன்று தனில் நின்றும்

ஒரு யோகத்திலேயே நிலைநின்றாலும்

அவ்விரண்டின் நின்ற பயன் எல்லாம் நிகழ்ந்து உடன் இயல்வான்

அவ் விரண்டினாலும் கிடைக்கும் எல்லாப்பயனையும் ஒருசேரப் பெறுவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top