பகவத் கீதை வெண்பா காட்சிமுத லைந்தின் கதிகண் டுயிலுயிர்த்தன் மாட்சியுரை மற்றவையும் வன்புலன்க-ளாட்சியினிற்றம் பயனிற் செல்லுமெனத் தான்மதித்து யானியலே னென்பதறி வான்யோகி யிங்கு. 5.8 இங்கு யோகி இவ்வுலகில் கர்மயோகததைச் செய்பவன் காட்சி முதல் ஐந்தின் கதி கண்ணால் காண்பது, காதால் கேட்பது, மூக்கால் முகர்வது, நாவால் சுவைப்பது, மெய்யால் ஸ்பர்பரிப்பது என்னும் ஐந்து ஞானேந்திரிய வ்யாபாரங்கள் கண் துயில் உயிர்த்தல் கண்ணை மூடுவது திறப்பது தூங்குவது மூச்சுவிடுவது ஆகிய ப்ராண வ்யாபாரங்கள் மாட்சியுரை மற்றவையும் அழகாகப் பேசுவது முதலான கர்மேந்திரிய வ்யாபாரங்கள் ஆகியவற்றின் மூலம் வன் புலன்கள் வலிமைமிக்க இந்திரியங்கள் ஆட்சியினில் தம் பயனில் தமக்குரிய விஷயங்களில் செல்லும் – ஈடுபடுகின்றன என – என்று தான் மதித்து தான் உறுதி கொண்டவனாய் 'யான இயலேன்' என்பது அறிவான் இவ்விஷயங் களில் நான ஈடுபடுகின்றேனல்லேன் என அநுஸந்திப்பான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0