பகவத் கீதை வெண்பா தோன்றா வயனுடம்பிற் றோன்றும் பொருளெல்லா மேன்றாம் பகலி னிடையுதிக்கு – மான்றார்ந்தங் காகு மவையெல்லா மவ்வூருவுள் ளேயடங்கிப் போகு மிரவாகும் போது. 8.17 தோன்றும் பொருள் எல்லாம் புலனாகக்கூடிய எல்லாப் பொருள்களும் தோன்றா அவன் உடம்பில் புலனாகாத பிரமனின் உடம்பில் ஏன்று ஆம் பகலினிடை உதிக்கும் ( அவனது ) பகல் தொடங்கும்போது உண்டாகும் ஆன்று ஆர்ந்து அங்கு ஆகும் அவையெல்லாம் அப்படிப் பகலில் அவ்வுடலில் தோன்றும் அப்பொருள்கள் எல்லாம் இரவாகும்போது பிரமனுக்கு இரவு ஏற்படும்போது அவ்வுருவுள்ளே அடங்கிப்போகும் அப்பிரமனுடைய உருவினுள்ளே லயித்துவிடும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0