பகவத் கீதை வெண்பா ஆயிர மேலுகங்க ளாங்கயனுக் கோர்பகலா மாயிர மாமிரவு மற்றதுவென் – றாயும் பகலிரவு தானறியும் பண்புடையா ரின்னே நிகரறிவு தாஞ்செய்வர் நின்று . 8.16 ஆங்கு அயனுக்கு ஸத்யலோகத்தில் உள்ள பிரமனுக்கு ஆயிரம் மேல் உகங்கள் ஆயிரம் சதுர்யுகங்கள் ஓர் பகலாம் ஒரு பகலாகின்றது இரவு (அவனுடைய) ஓர் இரவும் ஆயிரம் மற்றது ஆம் ஆயிரம் சதுர்யுகமாகும் என்று என்று இவ்வண்ணமாக ஓயும் பகல் இரவுதான் (பிரமனுடைய) அநித்யமான பகலையும் இரவையும் அறியும் பண்புடையோர் தாம் அறியும் பெருமை பெற்றவர்கள் இன்னே இந்த ரீதியில் நிகரறிவு நின்று செய்வர் சிறந்த அறிவை நிலையாக உடையவராகின்றனர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0