பகவத் கீதை வெண்பா

வேதா வுலகளவு மீண்டு வருமுலகென் 
றோதாநின் றார்க ளுணர்வுடையோர் – போதார்ந்த
தாராருங் கௌந்தேயா வென்னடைந்தார் தாமீண்டு
வாரார் மறுபிறப்பின் வாய்.            8.15

போதார்ந்த தாராரும் கௌந்தேயா

புஷ்பங்கள் நிறைந்த மாலையணிந்த குந்தீபுத்திரனே!

வேதாவுலகளவும் உலகு

ப்ரஹ்மலோகம் வரையிலுமுள்ள எல்லா உலகங்களும்

மீண்டு வரும்

அழிவையுடையவை

என்று உணர்வுடையோர் ஓதாநின்றார்கள்

என்று அறிவாளிகள் சொல்லுகின்றனர்

என்னை அடைந்தார் தாம்

என்னை அடைந்தவர்களோவெனில்

மறுபிறப்பின் வாய் மீண்டு வாரார்

மறுபடியும் (இவ்வுலகில்) பிறப்பை அடையமாட்டார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top