பகவத் கீதை வெண்பா

அதிபூதம் பூத பரிணாம மாகு 
மதிதெய்வந் துய்க்கு மவனாகு – மதியெச்ச
மாங்குயிருண் ணின்றே யாராத் தியனாகி
யோங்கிறையா நானென் றுணர்.      8.4

அதிபூதம்

(ஐஸ்வர்யார்த்திகளுக்கு அறியவேண்டியதாகக் கூறப்பட்ட) அதிபூதம் எனப்பட்டது

பூத பரிணாமம் ஆகும்

பஞ்சபூ தங்களின் பரிணாமமான (சிறந்த) ஸப்தம் முதலான விஷயங்களே

அதிதெய்வம்

(அவர்களுக்கு அறியத்தக்கதாகக் கூறப்பட்ட) அதிதைவம்

துய்க்கும் அவனாகும்

(அந்தச் சிறந்த ஸப்தாதி விஷயங்களை) அநுபவிக்கும் புருஷனின் நிலையேயாம்

அதி யெச்சம்

(மூவர்க்கும் அறியவேண்டியதாகக் கூறப்பட்ட) அதியஜ்ஞம் எனப்பட்டது

ஆங்கு உயிருள் நின்றே

எனது தேஹமான இந்திரன் முதலான ஜீவர்களுக்குள் அந்தர்யாமியாய் நின்று 

ஆராத்தியன் ஆகி

ஆராதிக்கப்படுபவனாகி

ஓங்கு இறையாம் நான்

ஓங்கிநிற்கும் ஸர்வேஸ்வரனான நானே

என்று உணர்

என்று அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top