பகவத் கீதை வெண்பா

அந்தகா லத்திலு மாங்கென்னை யேநினைந்திங் 
கிந்த வுடலினைவிட் டேகுமவன் – சிந்தைநிகழ்
என்றன்மை தானெய்து மீங்கிதனிற் சங்கைசேர்
தன்றன்மை யொன்றில்லை தான்.      8.5

அந்த காலத்திலும்

(தான் விரும்பிய பலனைப்பெறும்) கடைசிக்காலத்திலும்

ஆங்கு என்னையே நினைந்து

(தான் விரும்பிய நிலையோடு கூடிய) என்னையே நினைத்து

இந்த உடலினை இங்கு விட்டு ஏகுமவன்

இவ்வுடலை இங்கு விட்டுச் செல்பவன்

சிந்தை நிகழ் என் தன்மைதான் எய்தும்

தான் நினைத்த அந்த எனது நிலையையே அடைவான்

ஈங்கு இதனில் சங்கை சேர் தன் தன்மைதான் ஒன்று இல்லை

இங்கு இவ் விஷயத்தில் தான் ஐயமுறுவதற்குச் சிறிதும் இடமில்லை 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top