பகவத் கீதை வெண்பா

தானெந்த வெந்தப் பொருளுன்னித் தன்முடிவி 
லூன்வந்த வாக்கை யொழித்தேகுந் – தானந்த
வந்தவது தன்னையே யாங்கணையு மெக்காலுஞ்
சிந்தையது செய்தலினாற் சேர்ந்து.      8.6

தன் முடிவில்

தனக்கு மரணம் வந்தபோது

தான் எந்த எந்தப் பொருள் உன்னி

தான் எந்த எந்த நிலையை நினைத்துக்கொண்டு

ஊன் வந்த ஆக்கை ஒழித்து ஏகும்

மாம்ஸமயமான சரீரத்தை விட்டுப் போகிறானோ

தான் அந்த அந்த அதுதன்னையே ஆங்கு அணையும்

அந்த அந்த நிலையையே அடுத்தபடி அடைவான்

எக்காலும் அது சேர்ந்து சிந்தை செய்தலினால்

எப்போதும் அந்நிலையிலேயே நினைவைச் செலுத்தியவனாகையாலே 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top