பகவத் கீதை வெண்பா

வேறுசிலர் ஞானமெனும் வேள்வியான் மெயத்தன்மை
தேறியெனை யேமருவிச் சேவிப்பர் – கூறுபடும்
பல்வகையா லெங்கும் பரந்தவெனை யேகமா
நல்வகையா லென்னை நயந்து.       9.15

வேறுசிலர்

மற்றும் சில மஹாத்மாக்கள்

ஞானமெனும் வேள்வியால்

(முற்கூறிய கீர்த்தனம் முதலானவற்றோடு) ஜ்ஞானமெனும் யஜ்ஞத்தினாலும்

மெயத்தன்மை தேறி

நானே காரணமாகவும் காரியமாகவும் இருப்பவன் எனும் உணமையை அறிந்து

எனையே மருவி

என்னையே ஆராதிப்பவர்களாய்

கூறுபடும் பலவகையால் எங்கும்

தனித்தனியாயிருக்கும் பலவகைப்பட்ட எல்லாப் பொருள்களிலும்

பரந்த எனை

ஆத்மாவாக உள் நுழைந்து வியாபித்திருக்கும் என்னை

நல்வகையால்

(இந்த ஸரீராத்மத தன்மையாகிற) நல்ல வழியாலே

என்னை ஏகமா நயந்து

என்னைக் காரணநிலையில் ஒருவனாக அறிந்து

சேவிப்பர்

உபாஸிப்பார்கள் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top