பகவத் கீதை வெண்பா

இந்தவெனை வேதத் தியல்கினறா ரெச்சத்தால் 
வந்திறைஞ்சித் தம்வினைபோய் வானிரப்ப-ரந்தவவர்
சென்றமரர் நாடணைந்து தேவாதம் போகத்தை
நின்றமா்ந்து துய்ப்பார் நிகழ்ந்து.       9.20

வேதத்து இயலகின்றோ

(வேதாந்தத்திலல்லாமல் ) மூன்று வேதங்களில் (பூர்வபாகத்தில் ) சொல்லப்பட்ட தாமங்களில் மாத்திரம் ஊன்றிநிற்பவர்களாய்

தம் வினை போய்

(ஸோமபானம்செய்து அதனால் ஸவர்க்கம் முதலானவற்றை அடையத்தடையாயிருக்கும்) பாபங்களிலிருந்து நீங்கப்பெற்றவர்களாய்

எச்சத்தால்

(இந்திரன் முதலான தேவர்களை மாத்திரம் குறித்த) யஜ்ஞங்களாலே

இந்த எனை வந்து இறைஞ்சி

(அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாயிருக்கும்) என்னைக் குறித்தே (உண்மையில்) யாகம்செய்து

வான இரப்பர்

(இந்திரன் முதலானாரிடம் ஸவர்கத்தை வேண்டுகிறார்கள்

அந்த அவர்

அத்தகைய அவர்கள்

அமரா நாடு

(இவ்வுலகத் துன்பங்களில்லாத) தேவலோகத்தை

சென்று அணைந்து

சென்று அடைந்து

தேவா

தேவர்களுக்குரிய ஸுகாநுபவங்களை

நின்று தேவதம் போகத்தை

லோகத்தில் ஆங்காங்கு இருந்து

அமாந்து

(சிறந்த அவ்வநுபவங்களில்) பொருந்தி நின்று

நிகழ்ந்து துயப்பார்

ஈடுபட்டு அநுபவிப்பாகள் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top