பகவத் கீதை வெண்பா மற்றான தெய்வத்தை மன்னி விருப்புற்றுப் பற்றா மெனவிறைஞ்சும பண்பினரு – முற்றான வென்னையே யேத்திறைஞ்சி யெல்லாவே தாந்தவிதி தன்னையே யேய்ந்துணர்ந்தார் தாம் . 9.23 மற்றான தெய்வத்தை மன்னி என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களிடம் பகதர்களாகப் பொருந்தி ஈடுபட்டு விருப்புற்று ரத்தையோடு கூடியவர்களாய் பறறாம் என இறைஞ்சும் பண்பினரும் அவர்களே அடையத்தக்கவர்கள் என்று ஆராதிக்கும் குணமுடையவர்களும் முற்றான என்னையே ஏத்தி இறைஞ்சி அனைவர்ககும் அந்தர்யாமியாகையாலே அனைவருமான என்னையே துதித்து ஆராதித்து எல்லா வேதாந்த விதி தன்னையே ஏயந்து உணரார்தாம் (நான் அந்தர்யாமியாயிருக்கிறேன் என்னும் அறிவுடனேயே மற்ற தெய்வங்களைக் குறித்து யாகம் முதலானவற்றைச் செய்யவேணும என்னும்) எல்லா வேதாந்த விதிகளையும் நன்கு அறியாதவர்களாயிருக்கிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0