கீதார்த்தசங்க்ரஹம் ऐकान्त्यं भगवत्येषां समानमधिकारिणाम् । यावत्प्राप्ति परार्थी चेत्तदेवात्यन्तमश्नुते ॥ २८ ॥ ஐகாந்த்யம் ப4கவதியேஷாம் ஸமாநமதி4காரிணாம் | யாவத்ப்ராப்தி பரார்த்தீ2 சேத் ததே3வாத்யந்தமஸ்நுதே || 28 || ஏஷாம் அதி4காரிணாம் இந்த மூன்றுவகைப்பட்ட அதிகாரிகளுக்கும், ப4கவதி எம்பெருமானிடம், ஐகாந்த்யம் மற்றதெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் ப4க்தி, ஸமாநம் பொதுவானது; யாவத்ப்ராப்தி பலனை அடைவதற்குள், பரார்த்தீ2 சேத் (ஐஶ்வர்யார்த்தி2யும் கைவல்யார்த்தி2யும்) பரமப்ராப்யமான பரமபுருஷனின் திருவடிகளை அடைய விரும்பினானாகில் தத் ஏவ அந்தத்திருவடியையே, அத்யந்தம் எப்போதும், அஶ்நுதே அடைகிறான். (உபாஸக ஜ்ஞானி ப2லனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில் அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0