श्रीभगवानुवाच –
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
ஸ்ரீ பகவான் உவாச |
பச்ய மே பார்த்த ரூபாணி சதசோத ஸஹஸ்ரச: |
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11.5
கண்ணன் கூறியது.
பார்த்தா! என்னுடைய தெய்வத்தன்மை வாய்ந்த, அநேக விதங்களாகவும், பல நிறங்களும், வடிவங்களும் உடையனவும் நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய் இருக்கும் என் உருவங்களைப் பார்.
அர்ஜுன! உன்னிடம் எனக்குள்ள அன்பினால் என்னுடைய ஈசுவர ரூபத்தை மட்டும் காண்பித்ததோடு மற்ற எனக்குள்ள எல்லா வடிவங்களையும், காண்பிக்க விரும்புகிறேன். உருவத்திலும், நிறத்திலும், தன்மையிலும் வேறுபட்டு எண்ணிக்கையில் அடங்காதவைகளை யெல்லாம் என் ஒரு விச்வரூபத்தில் காண்பாய்.