பகவத் கீதை

सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लो‍के सर्वमावृत्य तिष्ठति ॥ १३.१४ ॥

ஸர்வத: ப்ரணிபாதம் தத் ஸர்வதோ க்ஷிரோமுகம் |
ஸர்வத: ச்ருதிமல்லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்ட்டதி ||        13.14

அந்த முக்த ஜீவன் எங்கும் பல கைகால்கள் இருந்தால் எதைச் செய்யக்கூடுமோ, எங்கும் பல கண்கள் காதுகளிருந்தால் எதைக் காணவும் கேட்கவும் முடியுமோ, அவைகளையெல்லாம் செய்யவும் காணவும் கேட்கவும் சக்தி படைத்தவன். தன் ஜ்ஞான ஒளியினால் எங்கும் பரந்திருப்பவன்.

தனக்குப் புலன்களில்லாமலிருந்தும், உடலின் புலன்களின் செயல்களினால் பிரகாசிக்கிறான். சரீரத்தினுள் அவன் இருந்தும், அச்சரீரத்தினுள் சம்பந்தமற்று இருந்து, அவ்வுடலை தரிக்கிறான்; சரீரத்தின் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் ஜீவனுக்கில்லாமலிருந்தும் அக்குணங்களின் பலனை அனுபவிக்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top