பகவத் கீதை

अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥ १३.१७ ॥

அவிபக்தஞ்ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்த்திதம் |
பூத பர்த்ரு ச தத் ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச ||        13.17

எல்லா உடலிலும் உள்ள ஆத்மாக்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் தனித்தனியானவை.பஞ்சபூதங்களாலான எல்லா உடலையும் தரிக்கிறான் ஜீவன். நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணித்து அது வேறு விதமாய் வெளியில் வருவதற்கும் காரணம் ஜீவனே என்பது அறியத்தக்கது.

தேவன், மனிதன், மிருகம், பறவை இப்படி பலவிதமாயுள்ள உடல்கள் பூதம் எனப்படும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு ஜீவனிருந்து அந்தந்த உடலை தரிக்கிறான். ஆனால் எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை அதாவது அணு வடிவமானவை; ஞானத்தை குணமாக உடையவை. சிலர் யானைக்கு யானை அளவு ஜீவன், பூனைக்குப் பூனை அளவு ஜீவன் என்பர். இது சரியானதல்ல.

உடல் பெரிதாக யிருந்தாலும் சிறியதாக யிருந்தாலும் அதனுள்ளிருக்கும் ஜீவன் அணுவாய் ஜ்ஞான ஸ்வரூபனாய் ஜ்ஞானத்தை குணமாக உடையவனாயிருக்கிறான். இந்த ஜீவாத்மா அந்த உடலை தரிக்கிறான், பசியை உண்டாக்குபவனும் அவனே. அவனே உணவை உட்கொண்டு, அதை ஜீரணிக்கவும் செய்கிறான். அதினுள் உள்ள ஸாரத்தை எடுத்துக் கொண்டு, மிகுதியை வெளியில் தள்ளுபவனும் அந்த ஜீவாத்மாவே.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top