கீதார்த்தசங்க்ரஹம்

भक्तियोगः परैकान्तप्रीत्या ध्यानादिषु स्थितिः ।
त्रयाणामपि योगानां त्रिभिरन्योन्यसङ्गमः || २४ ॥
ப4க்தியோக3: பரைகாந்தப்ரீத்யா த்4யாநாதி3ஷு ஸ்தி2தி: |
த்ரயாணாமபி யோகா3நாம் த்ரிபி4: அந்யோந்ய ஸங்க3ம: || 24 ||

ப4க்தியோக3:

பக்தியோகமாவது

பரைகாந்த ப்ரீத்யா

பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடுகூட

த்4யாநாதி3ஷு ஸ்தி2தி:

அவனை தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலேயாகும்

த்ரயாணாமபி யோகா3நாம்

கர்மம், ஜ்ஞாநம், ப4க்தி எனப்படும் மூன்று யோகங்களில்

த்ரிபி4: அந்யோந்ய ஸங்க3ம:

ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top