கீதார்த்தசங்க்ரஹம் निजकर्मादि भक्तथन्तं कुर्यात्प्रीत्यैव कारितः । उपायतां परित्यज्य न्यस्येदेवे तु तामभीः ।। ३१ ।| நிஜகர்மாதி3 ப4க்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: | உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத்3 தே3வேது தாமபீ4: || 31 || நிஜகர்மாதி3 தனது வர்ணாஸ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக, ப4க்த்யந்தம் பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும், உபாயதாம் பரித்யஜ்ய 'உபாயம்' என்னும் எண்ணத்தைக் கைவிட்டு, ப்ரீத்யா ஏவ காரித: (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலேயே தூண்டப்பட்டவனாய், குர்யாத் (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்; அபீ4: பயமற்றவனாய், தாம அந்த உபாயத்வத்தை, தே3வே து எம்பெருமானிடமே, ந்யஸ்யேத் அநுஸந்தி4க்கவேண்டும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0