பகவத் கீதை வெண்பா ஏது பிரமமதா மேதத்தி யாத்துமமா மேது கருமமா மிங்கிறைவா – வேதா மதிபூத மேதா மதிதெய்வ மேதா மதியெச்ச மெங்ஙனிய லாம். 8.1 இறைவா ஈசனே ! இங்கு கைவல்யார்த்திகள் அறியவேண்டியவையான பிரமமது ஏதாம் ப்ரஹ்மம் எனப்படுவது யாது ? அத்தியாத்துமம் ஏதாம் அத்யாத்மம் எனப்படுவது யாது? கருமம் ஏதாம் கர்மம் எனப்படுவது யாது? (இங்கு ஐஸ்வர்யார்த்திகள் அறியவேண்டியவை யான) அதிபூதம் ஏதாம் அதிபூதம் எனப்படுவது யாது ? அதி தெய்வம் ஏதாம் அதி தைவம் எனப்படுவது யாது? (இங்கு மூவகை அதிகாரிகளும் அறியவேண்டியதான) அதியெச்சம் ஏதாம் அதியஜ்ஞம் எனப்படுவது யாது? எங்ஙன் இயலாம் அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது? Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0