பகவத் கீதை வெண்பா வேறா முருத்திரரிற் சங்கரனான் வித்தேசன் கூறா மியக்கர் கொலையரக்கர்க்-காறாத பாவகனான் பண்பார் வசுக்களுக்குள் பல்கிரிக்குள் மேவவுயர் மேருவுநான் மிக்கு. 10.24 வேறாம் உருத்திரரில் சிறப்புற்றவர்களான பதினொரு உருத்திரர்களுக்குள் சங்கரன் நான் (தலைவனான) சிவன் நானே கூறாம் இயக்கர் கொலை அரக்கர்க்கு நெருங்கினவர்களான யக்ஷர்கள், கொடுந்தொழிலைப் புரியும் ராக்ஷஸர்களுக்குள் வித்தேசன் நான் பணத்துக்கு அதிபதியான குபேரன் நானே பண்பு ஆர் வசுக்களுக்குள் நற்குணம் நிறைந்த எட்டு வஸுக்களுக்குள் ஆறாத பாவகன் நான் (நற்பண்புகளில் என்றும்) தாழ்வுறாத பாவகன் என்னும் வஸுவாகிறேன் மேவ உயர் பல் கிரிக்குள் சிகரங்களால் மிகவும் உயர்ந்திருக்கும் பல மலைகளுக்குள் மிக்கு மேருவும் நான் தலைசிறந்த மேருவும் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0