பகவத் கீதை வெண்பா

அக்கேத் திரம்யாதா மாங்கெவ்வா றெவ்விகற்பு
மிக்கெதிலா மெம்மயமாய் மேவுமருந் – தக்கவிவன்
றானேவ னெத்தகையோன் சார்ந்தசுருக் கத்ததனை
யானேர்ந்து சொல்லக்கே ளிங்கு.      13.3

அக்கேத்திரம்

முன் இரண்டு சுலோகங்களில் சொல்லப்பட்ட 'க்ஷேத்ரம்' எனப்படும் சரீரம்

யாதாம்

எந்த த்ரவ்யத்தினாலானது

ஆங்கு எவ்வாறு

எவற்றுக்கு இருப்பிடமாயிருக்கிறது

எவ்விகற்பு

எவையாகப் பரிணமிக்கிறது

மிக்கு எதிலாம்

எந்தப் பயனுக்காக இது உண்டாயிருக்கிறது

எம்மயமாய் மேவும்

எந்த ஸ்வரூபத்தை உடையது இது

அரும் தக்க இவன்தான் ஏவன்

சிறப்பும் தகுதியுமுடையவனாய் முன் இரு ஸ்லோகங்களில் சொல்லப்பட்ட க்ஷேத்ரஜ்ஞனான ஜீவன் எந்த ஸ்வரூபத்தை உடையவன்

எத்தகையோன்

அவன் எத்தகைய பெருமையையுடையவன்

சார்ந்த

( ஆகிய இவை) பற்றிய

சுருக்கத்து அதனை

சுருக்கம் முழுவதையும்

யான் நேர்ந்து சொல்ல

நான்முறையாகச் சொல்ல

இங்கு கேள்

(நீ) இப்போது கேட்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top