பகவத் கீதை வெண்பா

மன்னுமுணர் வில்லாமை யொன்றின் முயல்வறுதன்
மன்னுமுயி ரோர்ப்பின்மை மாமோக – மென்னுமிவை
மீதி லுயர்தமத்தின் மேவுமவை யாகநீ
கோதில் குருமுதல்வா கொள்.        14 . 13

கோது இல் குருமுதல்வா!

குற்றமற்ற குருகுலத் தோன்றலே!,

மன்னும் உணர்வு இல்லாமை

நிலைநின்ற அறிவுண்டாகாமை,

ஒன்றில் முயல்வு அறுதல்

எதிலும் முயற்சியில்லாமை,

மன்னும் உயிர் ஓர்ப்பின்மை

நிலை நின்ற ஆத்மாவின் விஷயத்தில் கவனமின்மை,

மாமோகம்

விபரீத ஜ்ஞானம்,

என்னும் இவை

என்கிற இத்தன்மைகள்,

மீதில் உயர் தமத்தின்

தமோகுணம் மேலோங்கி நிற்கும்போது,

மேவுமவை ஆக

உண்டாகும் கார்யங்கள் என்று,

நீ கொள்

நீ அறிவாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top