பகவத் கீதை வெண்பா சித்து மசித்து மனாதியெனச் சிந்தி நீயத்தில் விகார மணிகுணங்க -ளொத்தெழுந்துபந்தமுறு வித்தாகும் பந்தமொழி வித்தாகும்வந்தெனவெண் ணுற்று மதி. 13.19 சித்தும் அசித்தும் மூலப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் அனாதி அனாதி காலமாகச் சேர்ந்திருப்பவை என நீ சிந்தி என்று நீ அறிவாயாக அத்தில் அந்த ப்ரக்ருதியிலிருந்து விகாரம் (இச்சை த்வேஷம முதலான) விகாரங்களும் அணி குணங்கள் அமாநித்வம் முதலிய) நற்குணங்களும் ஒத்து எழுந்து வந்து வாசியில்லாமல் உண்டாகி ஆத்மாவையடைந்து பந்தம் உறு வித்தாகும் பந்தம் ஒழி வித்தாகும் (முறையே) ஸம்ஸாரபந்தத்தை அடைவதற்குக் காரணமாகவும் அந்தபந்தம் அழிவதற்குக் காரணமாகவும் ஆகின்றன என என்று எண்ணுற்று ஆராய்ந்து மதி அறிவாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0