பகவத் கீதை வெண்பா எவ்வா றிரவிதா னிந்த வுலகனைத்துமிவ்வா றெழில்விளக்க மெய்துவிக்கு-மவ்வாறுபாரதனே யிவ்வுடல மெல்லாம் பரந்துயிர்தான்சீரதனாற் றான்விளக்குஞ் சேர்ந்து 13.33 பாரதனே பரதகுலத்துதித்தவனே! ரவிதான் ஸூர்யன் ஒருவனே இந்த உலகு அனைத்தும் காணப்படும் உலகங்கள் எல்லாவற்றையும் இவ்வாறு நாம் காண்பதுபோலே எழில் விளக்கம் எவ்வாறு எய்துவிக்கும் எப்படி அழகாக விளங்கச்செய்கிறானோ அவ்வாறு அப்படியே உயிர்தான் ஒருவனான ஜீவன் இவ்வுடலம் எல்லாம் தனது இந்த உடம்பை உள்ளும் புறமும் காலிலிருந்து தலைவரையிலும் சீர் அதனால்தான் சேர்ந்து பரந்து தனது ஜ்ஞானத்தாலே (உடலுடன்) சேர்ந்து அதை வ்யாபித்து விளக்கும் (அதை) விளங்கச்செய்யும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0