இவ்விதம் உடலைப்பற்றியும், ஜ்ஞானம் பெறக்கூடிய அமானித்வம் முதலிய குணங்கள், அவைகளால், அறியக் கூடிய ஜீவாத்மாவைப்பற்றியும் சுருக்கமாக உனக்குச் சொல்லப்பட்டன. பக்தியுடன் இவைகளை என்னிடமிருந்து கேட்டு அறிந்தவன் என் ஸ்வபாவத்தை (நன்மையை) அடையத் தகுதியுள்ளவனாகிறான்.
இது வரை உடல் உயிர் இவைகளைப் பற்றியும் பரிசுத்த ஜீவாத்மாவை அடைவதற்கு வேண்டிய குணங்களையும் சுருக்கமாகச் சொன்னான் கண்ணன். இதை பக்தி சிரத்தையுடன் என்னிடமிருந்து கேட்டறிந்தவன், சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு சில வகையில் என் ஸாம்யத்தைப் பெற தகுந்தவனாகிறான் என்கிறான்.