பகவத் கீதை

इति क्षेत्र तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥ १३.१९ ॥

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞானம் ஜ்ஞேயஞ்ச உக்தம் ஸமாஸத: |
மத் பக்த ஏதத் விஜ்ஞாய மத்பாவாய உபபத்யதே ||        13.19

இவ்விதம் உடலைப்பற்றியும், ஜ்ஞானம் பெறக்கூடிய அமானித்வம் முதலிய குணங்கள், அவைகளால், அறியக் கூடிய ஜீவாத்மாவைப்பற்றியும் சுருக்கமாக உனக்குச் சொல்லப்பட்டன. பக்தியுடன் இவைகளை என்னிடமிருந்து கேட்டு அறிந்தவன் என் ஸ்வபாவத்தை (நன்மையை) அடையத் தகுதியுள்ளவனாகிறான்.

இது வரை உடல் உயிர் இவைகளைப் பற்றியும் பரிசுத்த ஜீவாத்மாவை அடைவதற்கு வேண்டிய குணங்களையும் சுருக்கமாகச் சொன்னான் கண்ணன். இதை பக்தி சிரத்தையுடன் என்னிடமிருந்து கேட்டறிந்தவன், சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு சில வகையில் என் ஸாம்யத்தைப் பெற தகுந்தவனாகிறான் என்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top