பகவத் கீதை வெண்பா

என்னாலே காணலா மென்றிறைவா! வெண்ணுதியேன்
மன்னா! குணயோக மாயவனே!   நன்றாக
வோங்கியசீ ருன்வடிவை யொன்றொழியா மேயெனக்குப்
பாங்கிசையக் காட்டு பயின்று.    11.5

இறைவா!

ஸர்வேஶ்வரனே,

மன்னா!

(அனைவர்க்கும்) அரசனே!

குணயோக மாயவனே

கல்யாண குணங்களையுடைய மாயப்பிரானே!

நன்றாக ஓங்கிய சீர் உன் வடிவை

சிறப்பாக ஓங்கி நிற்கும் பெருமைகளையுடைய ரூபத்தை,

என்னாலே காணலாம் என்று எண்ணுதியேல்

என்னால் பார்க்கக்கூடும் என்று எண்ணுவாயாகில், (அதை)

ஒன்று ஒழியாமே

முழுவதும்,

எனக்கு

எனக்கு

பாங்கு இசைய பயின்று காட்டு

நன்றாக (என் நெஞ்சில்) பொருந்தும்படி தெளிவாகக் காட்டுவாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top