பகவத் கீதை வெண்பா தானிறையைப் பார்த்தன் றகவுரைத்தான் மாயனே!மானிடமா நின்னழகார் மாமேனி – யானெனதுகண்ணாரக் கண்டு கருத்தமர்ந்தேன் றன்மையினிற்றிண்ணாரச் சேர்ந்தேன் சிறந்து. 11.52 பார்த்தன் தான் அர்ஜுனனானவன் இறையை கண்ணனைப் பார்த்து தக உரைத்தான் தக்க வார்த்தையைச் சொன்னான் மாயனே மாயப்பிரானே! மானிடமாம் நின் அழகார் மாமேனி மனித உருவையுடைய உன்னுடைய அழகு பொருந்திய திருமேனியை யான் எனது கண்ணாரக் கண்டு நான் எனது கண்கள் நிறையக் கண்டு கருத்து அமர்ந்தேன் நினைவில் அமைதி பெற்றேன் சிறந்து இன்புற்று தன்மையினில் திண் ஆரச்சேர்ந்தேன் தன் நிலையை உறுதியாக அடைந்தேன்” Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0