பகவத் கீதை வெண்பா இங்கணையு மாதி யிலனாற் குணமிலனாற்பங்கமிலோ னிந்தப் பரமான்மா – தங்கியுடல்நின்றிடினுங் கௌந்தேயா நேரொன்றுந் தான்செய்யான்என்றுமதிற் றோய்விலனா மேய்ந்து 13.31 கௌந்தேயா குந்தீ புத்ரனே! இங்கு அணையும் இந்த பரமான்மா இந்த ஸரீரத்தோடு சேர்ந்திருப்வவனாய் இதைக்காட்டிலும் மேலானவனான இந்த ஜீவன் உடல் தங்கி நின்றிடினும் உடலிலே தங்கியிருந்தபோதிலும் ஆதி இலனால் (ஒரு காலத்தில்) உண்டாக்கப்படாத அனாதிப்பொருளாகையாலே பங்கம் இலோன் அழிவில்லாதவன் குணமிலனால் ஸத்வம் முதலான குணங்களில்லாமையால் நேர் ஒன்றும் தான் செய்யான் ஸரீரம் செய்யும் காரியங்களை நேரே தான் செய்வதில்லை என்றும் எப்போதும் அதில் ஸரீரத்தின் தன்மைகளில் ஏய்ந்து பொருந்தி தோய்விலனாம் ஒட்டுவதில்லை Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0