பகவத் கீதை வெண்பா

பூதங்கள் பூதாதி புத்தி பிரகிருதி
யோதிந்தி யம்பதினொன் றொண்புலனைந் – தீதில்வரு
மிச்சைசின மின்பதுன்ப மேலுமுடல் சேதனர்தம்
சூச்சிருப்பி தாகுஞ் சுருக்கு .     13.5

பூதங்கள்

ஐந்து பூதங்கள்

பூதாதி

(அவற்றுக்குக் காரணமான ) அஹங்காரம்

புத்தி

(அதற்குக்காரணமான) மஹான்

பிரகிருதி

(அதற்குக் காரணமான) மூலப்ரக்ருதி

ஓது இந்தியம் பதினொன்று

பதினொன்றாக ஓதப்படும் இந்த்ரியங்கள்

ஒண்புலன் ஐந்து

ஒளிபொருந்திய விஷயங்கள் ஐந்து

ஈதில் வரும்

இவற்றினால் விளையும்

இச்சை சினம் இன்ப துன்பம்

விருப்பு வெறுப்பு ஸுகம் துக்கம்

சேதனர்தம்

ஜீவர்களுடைய

துச்சு இருப்பு

போகத்திற்கு ஆதாரமான

ஏலும் உடல்

பூதங்கள் முதலானவற்றின் கூட்டான உடல்

இது சுருக்கு ஆகும்

இது (க்ஷேத்ரத்தின்) சுருக்கமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top