பகவத் கீதை வெண்பா

முக்குணங்க டம்மின் முதற்குணந்தான் மற்றிரண்டு
மொக்க வமுக்கி யுறுமேலா – மிக்க
விடைக்குணந்தான் பார்த்தனே மற்றிரண்டு மிங்கே
கடைக்குணமு மவ்வாறு காண்.          14 . 10

பார்த்தனே

அர்ஜுனா!

இங்கே

இவ்வுலகில்

முக் குணங்கள் தம்மில்

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் இந்த முக்குணங்களில்

முதல் குணம்

முதலாவதான ஸத்வகுணமானது

மற்று இரண்டும் ஒக்க அமுக்கி

மற்ற இரு குணங்களான ரஜஸ்ஸையும், தமஸ்ஸையும் ஒருபடிப்பட அடக்கி

தான் மேலா உறும்

(சிலசமயம்) தான் மேலோங்கி நிற்கும்;

மிக்க இடை குணம்

மிகுந்திருக்கும் நடுக்குணமான ரஜோகுணம்

மற்று இரண்டும் (ஒக்க அமுக்கி)

மற்ற இரு குணங்களான ஸத்வகுணத்தையும், தமோகுணத்தையும் ஒருபடிப்பட அமுக்கி

தான் (மேலா உறும்)

(சிலசமயம்) தான் மேலோங்கி நிற்கும்;

கடைக்குணமும்

கடைசிகுணமான தமோகுணமும்

அவ்வாறு காண்

அவ்வண்ணமே மற்ற இரு குணங்களான ரஜோகுணத்தையும், ஸத்வகுணத்தையும் ஒருபடிப்பட அமுக்கி (சிலசமயம்) தான் மேலோங்கி நிற்கும் என்று அறிவாய்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top