பகவத் கீதை வெண்பா

கன்மநயந் தோர்குலத்திற் காதலுடன் றான்பிறக்கும்
வன்மையிர சத்துயர்வின் மாய்ந்தவவ – னன்மையிலா
மூட ரிடைப்பிறக்கு முழுதுந் தமத்துயர்வில்
பீடை யுறமரித்தான் பின்.        14 . 15

வன்மை இரசத்து உயர்வில் மாய்ந்த அவன்

வலிமை மிக்க ரஜோகுணம் மேலோங்கி நிற்கும்போது மரணமடைந்தவன்,

கன்மம் நயந்தோர் குலத்தில்

பலனைக் குறித்துக் கர்மங்களை அனுஷ்டிப்பதில் பற்றுள்ளவர்களுடைய குலத்தில்,

காதலுடன் தான்

விருப்பத்துடனே,

பிறக்கும்

பிறவியெடுப்பான்,

முழுதும் தமத்து உயர்வில்

தமோகுணம் மிகவும் ஓங்கி நிற்கும்போது,

மரித்தான்

இறந்தவன்,

பின் பீடை உற

மேன்மேலும் பல துன்பங்களை அனுபவிக்கும்படியாக,

நன்மை இலா மூடரிடை பிறக்கும்

நன்முயற்சி செய்யமுடியாத அறிவற்ற (திர்யக் ஸ்தாவரப்) பிறவிகளில் பிறப்பான். ஸாம்ஸாரிகத் துன்பத்தொடரே என்று (ரஜோகுணத்தின் தன்மை அறிந்தவர்கள்) கூறுகிறார்கள்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top