பகவத் கீதை வெண்பா

ஆங்கவற்றிற் சத்துவந்தா னான்றழுக்கற் றார்தலினா
லீங்கொளி செய்வதுநோ யீடழித்துப் – பாங்கில்
வருஞ்சுகத்தில் மற்றறிவின் மன்னுநசை தன்னாற்
பொருந்துயிரைக் கட்டும் புணர்ந்து.            14 . 6

ஆங்கு அவற்றில்

அந்த ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்குள்

சத்துவந்தான்

ஸத்வகுணமானது

ஆன்று அழுக்கற்று ஆர்தலினால்

(ஆத்மாவின் அறிவையும் இன்பத்தையும்) மறைக்காமல் நன்கு வெளிப்படுத்துவதையே இயல்வாகக் கொண்டதாகையால்,

ஈங்கு

இவ்வுலகில்

நோய் ஈடு அழித்து

நோய்கள் இல்லாமல் செய்து

ஒளிசெய்வது

(ஆத்மாவுக்கு) உண்மை அறிவை விளைப்பது

பாங்கில் வரும் சுகத்தில்

நல்ல முறையில் வரும் இன்பத்திலும்

மற்று அறிவில்

நல்ல அறிவிலும்

மன்னும்

பொருந்தி நிற்கும்

நசைதன்னால்

பற்றை விளைத்து

பொருந்து உயிரை

தேஹத்தில் உள்ள ஜீவனை

புணர்ந்து கட்டும்

மேன்மேலே கட்டுப்படுத்துகிறது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top