பகவத் கீதை வெண்பா தம்மறிவு கேடுதருந் தானறிநீ மோக மமருயிர்கட் கெல்லா மளிக்குந் – தமரென்னா தோராமை சோம்ப லுறக்கத்தாற் பார்த்தனே சோராமற் கட்டுந் துணிந்து. 14 . 8 பார்த்தனே அர்ஜுனா! தமம் என்பது தமோ குணம் என்னும் குணம் தம் அறிவுகேடுதரும் பொருள்களைப்பற்றிய மாறுபட்ட அறிவைத் தமக்கு விளைக்கும் (என்றும்), அமர் உயிர்கட்கு எல்லாம் தேஹத்திலிருக்கும் எல்லா ஜீவர்களுக்கும் மோகம் அளிக்கும் அறத்திற்குப்புறம்பான அறிவை விளைக்கும் (என்றும்) நீதான் அறி நீ அறிவாயாக (மேலும் அது) ஓராமை சோம்பல் உறக்கத்தால் கவனமின்மை, சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் சோராமல் துணிந்து கட்டும் (ஸம்ஸாரத்தில்) தப்பாதபடி உறுதியாகக் கட்டிவிடும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0