பகவத் கீதை வெண்பா உகப்புவெறுப் பின்றி யுயர்நசையு மற்றே மிகத்தனியல் வாமென்று மேவி – யகப்பயனி லாசையொழிந் தாங்கியலு மக்கரும முற்குணத்திற் பேசவரு மேலுயர்த்தி பெற்று. 18.23 உகப்பு வெறுப்பு இன்றி புகழில் விருப்பமோ இகழ்வில் வெறுப்போ இல்லாமல் உயர்நசையும் அற்றே (நான் கர்த்தா என்னுடையது கர்மம் என்னும்) மிகுதியான பற்றும் இல்லாமல் தன் இயல்வாம் என்று தன் வர்ணாசிரமத்திற்கு உரியதாம் என்று மிக மேவி மிகவும் ஈடுபட்டு அகப்பயனில் ஆசை ஒழிந்து அதற்கு உரிய பலனில் ஆசையில்லாமல் ஆங்கு இயலும் அக்கருமம் கர்மாதிகார வேளையில் செய்யப்படும் அக்கர்மம் முற்குணத்தின் முதற்குணமாகிற ஸத்வகுணத்தின் மேல் உயர்த்தி பெற்று மிகுந்த சிறப்பைப் பெற்று பேச வரும் (ஸாத்விக கர்மம் என்று) சொல்லப்படும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0