பகவத் கீதை வெண்பா

ஏது பிரமமதா மேதத்தி யாத்துமமா 
மேது கருமமா மிங்கிறைவா – வேதா
மதிபூத மேதா மதிதெய்வ மேதா
மதியெச்ச மெங்ஙனிய லாம்.        8.1

இறைவா

ஈசனே !

இங்கு

கைவல்யார்த்திகள் அறியவேண்டியவையான

பிரமமது ஏதாம்

ப்ரஹ்மம் எனப்படுவது யாது ?

அத்தியாத்துமம் ஏதாம்

அத்யாத்மம் எனப்படுவது யாது?

கருமம் ஏதாம்

கர்மம் எனப்படுவது யாது?

(இங்கு ஐஸ்வர்யார்த்திகள் அறியவேண்டியவை யான) அதிபூதம் ஏதாம்

அதிபூதம் எனப்படுவது யாது ?

அதி தெய்வம் ஏதாம்

அதி தைவம் எனப்படுவது யாது?

(இங்கு மூவகை அதிகாரிகளும் அறியவேண்டியதான) அதியெச்சம் ஏதாம்

அதியஜ்ஞம் எனப்படுவது யாது?

எங்ஙன் இயலாம்

அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top