கீதார்த்தசங்க்ரஹம்

योगाभ्यास विधिर्योगी चतुर्धा योगसाधनम् ।
योगसिद्धिः स्वयोगस्य पारम्यं षष्ठ उच्यते ॥ १० ॥
யோகா3ப்4யாஸவிதி4ர் யோகீ3 சதுர்த்தா4 யோக3 ஸாத4நம் |
யோக3 ஶித்3தி4: ஸ்வயோக3ஸ்ய பாரம்யம் ஷஷ்ட2 உச்யதே || 10 ||

யோகா3ப்4யாஸவிதி4:

(ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோக3த்தைப் பழகும் முறையும்

சதுர்த்தா4 யோகீ3

நாலுவகைப்பட்ட யோகிகளும்

யோக3 ஸாத4நம்

(முற்கூறிய) யோகத்திற்கு ஸாத4நமாகிய அப்4யாஸம், வைராக்3யம் முதலானவையும்

யோக3 ஶித்3தி4:

(தொடங்கிய) யோக3ம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஶித்3தி4யடையும் என்பதும்

ஸ்வயோக3ஸ்ய பாரம்யம்

தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்

ஷஷ்டே2

ஆறாமத்தியாயத்தில்

உச்யதே

கூறப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top