கீதார்த்தசங்க்ரஹம்

भक्तेः श्रष्ट्यमुपायो क्तिरशक्तस्वात्मनिष्ठता ।
तत्प्रकारास्त्वतिप्रीतिर्भवते द्वादश उच्यते ॥ १६ ॥
16. ப4க்தே: ஶ்ரைஷ்ட்2டயமுபாயோக்திரஶக்தஸ்யாத்ம நிஷ்ட2தா |
தத்ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர் ப4க்தே த்3வாத3ஶ உச்யதே || 16 ||

ப4க்தே: ஶ்ரைஷ்ட்2டயம்

(ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) ப4க3வது3பாஸனமாகிற ப4க்தியின் சிறப்பும்

உபாயோக்தி:

அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்

ஶக்தஸ்ய

பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,

ஆத்மநிஷ்ட2தா

ஆத்மோபாஸனமும்

தத்ப்ரகாரா:

கர்மயோக3ம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான கு3ணங்களின் வகைகளும்

ப4க்தே அதிப்ரீதி: து

தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்

த்3வாத3ஶே

பன்னிரண்டாம் அத்தியாயத்தில்

உச்யதே

கூறப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top