கீதார்த்தசங்க்ரஹம் गुणबन्धविधा तेषां कर्तृत्वं तनिवर्तनम् । गतित्रयस्वमूलत्वं चतुर्दश उदीर्यते ॥ १८ ॥ கு3ணபந்த4 விதா4தேஷாம் கர்த்ருதவம் தந்நிவர்த்தநம் | க3தித்ரயஸ்வமூலத்வம் சதுர்த3ஶ உதீ3ர்யதே || 18 || கு3ணபந்த4 விதா4 (ஸத்வம் முதலான மூன்று கு3ணங்கள்) ஸம்ஸாரபந்த4த்துக்குக் காரணமாகும் முறையும் தேஷாம் கர்த்ருத்வம் அந்த கு3ணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும் தந்நிவர்த்தநம் அந்த கு3ணங்களை நீக்கும் முறையும் க3தித்ரயஸ்வமூலத்வம் (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், ப4 கவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும் தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும் சதுர்த3ஶே (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில், உதீ3ர்யதே சொல்லப்படுகிறது. Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0 Previous Next